நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம்

கூடுவாஞ்சேரி: நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் நிகழ்ச்சி நடந்தது. செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் நிகழ்ச்சி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் நேற்று நடந்தது. இதில், நகர மன்ற தலைவர் எம்.கே.டி.கார்த்திக்தண்டபாணி தலைமை  தாங்கினார்.  துணை தலைவர் வக்கீல் ஜி.கே லோகநாதன், நகராட்சி ஆணையர் இளம்பரிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள், தன்னார்வலர்கள், நகர மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டு தூய்மை உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.  மேலும், ‘என் குப்பை, என் பொறுப்பு’ என்னும் தலைப்பில் நடைபெற்ற பேச்சு, கட்டுரை, ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள், பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், பிளாஸ்டிக் மாற்று பொருள் குறித்து கண்காட்சி மற்றும் குப்பைகளை தரம் பிரித்தல் தொடர்பான விழிப்புணர்வு காணொளி காட்சி மற்றும் குப்பைகளை வீட்டிலேயே உரமாக்குதல் தொடர்பான விழிப்புணர்வு செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், உபயோகம் இல்லாத குப்பைகளில் வீசப்பட்ட பொருட்களில் இருந்து மாணவர்களால் உருவாக்கப்பட்ட கலை நயமான பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது….

The post நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் appeared first on Dinakaran.

Related Stories: