தேனி கலெக்டர் அலுவலக வளாகத்தில் கண்டமாகி நிற்கும் வாகனங்கள்

*பழுது பாருங்க… இல்ல ஏலம் விடுங்க…தேனி :  தேனி கலெக்டர் அலுவலக வளாகத்தில் பழுதாகி கண்டமாகி நிற்கும் அரசு வாகனங்களை பழுது பார்த்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் அல்லது ஏலம் விட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தேனியில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் அலுவலக அறை, மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம், ஆதிதிராவிடர் நல அலுவலகம், மாவட்ட வழங்கல் அலுவலகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அலுவலகம், மாவட்ட மகளிர் திட்ட அலுவகம், கனிம வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், முன்னாள் படைவீரர் நலன் உதவி இயக்கநர் அலுவலகம், மாவட்ட கருவூலம் என பல்வேறுத் துறை அலுவலகங்கள் செயல்படுகின்றன. துறைவாரியாக உயரதிகாரிகள் மாவட்டம் முழுவதும் ஆய்வுப் பணிக்கு செல்ல வாகனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இத்தகைய வாகனங்களில் சில கலெக்டர் அலுவலக வளாகத்தில் பழுதுபட்டு நிறுத்தப்பட்டுள்ளன. இவைகள் பழுது பார்க்கப்படாமல் துருப்பிடித்து நிற்கின்றன. இதற்காக தனித்துறை இருந்தும் வாகனங்கள் கண்டமாகி அரசுப் பணம் வீணாகி வருகிறது. எனவே, இந்த வாகனங்களை ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post தேனி கலெக்டர் அலுவலக வளாகத்தில் கண்டமாகி நிற்கும் வாகனங்கள் appeared first on Dinakaran.

Related Stories: