தேசிய கராத்தே போட்டியில் வெற்றி: மாணவர்களுக்கு பாராட்டு

 

மதுரை, ஜூன் 9: அகில இந்திய கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு மதுரையில் பாராட்டு விழா நடந்தது. புதுடெல்லியிலுள்ள கராத்தே அசோசியேசன் ஆப் இந்தியாவின் சார்பாக அகில இந்திய கராத்தே சாம்பியன் ஷிப் 2023க்கான போட்டிகள் புதுடெல்லியிலுள்ள தல்கோத்ரா ஸ்டேடியத்தில் கடந்த மாதம் 31ம் தேதி முதல் ஜூன் 2ம் தேதி வரை நடைபெற்றது. இந்தப் போட்டியில் தமிழகம் மற்றும் புதுச்சேரியிலிருந்து 59 பேரும் மற்ற மாநிலங்களிலிருந்து சுமார் 900 பேர் உள்ளிட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். இதில் தமிழகத்திற்கு 3 தங்கம், 1 வெள்ளி மற்றும் 6 வெண்கல பதக்கங்கள் கிடைத்தன.

இதில் மதுரை ஆலன் திலக் இன்டர்நேஷனல் கராத்தே பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டனர். இவர்களில் சாஸ்மின்  ஒரு தங்கம், இப்ராஹிம், குருவேங்கை, யாஸ்மின் பரக்கத் ஆகியோர் தலா ஒரு வெண்கல பதக்கம் பெற்றுள்ளனர். இந்த போட்டியில் சிறப்பாக பணியாற்றிய தனநாராயண பிரபு தேசிய நடுவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மதுரையில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் தலைமை பயிற்சியாளர் ராமமூர்த்தி மற்றும் பயிற்சியாளர் தன நாராயண பிரபு உள்ளிட்டோர் பாராட்டப்பட்டனர்.

The post தேசிய கராத்தே போட்டியில் வெற்றி: மாணவர்களுக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Related Stories: