தென்னங்சோலை வனம் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

 

திருப்பூர், ஜூலை 24: திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக தமிழக அரசு பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறது. திட்டங்களை பெறுவதற்கு சிரமமின்றி விண்ணப்பங்களை சமர்பிப்பதற்கு ஏதுவாக, சில திட்டங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிப்பதற்கு தற்போது தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் வசதி செய்யப்பட்டுள்ளது. எனவே மாற்றுத்திறனாளிகள் இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

கல்வி உதவித்தொகை விண்ணப்பம் (மாற்றுத்திறனாளி அடையாள அட்டை நகல்), குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், கல்வி பயிலும் சான்றிதழ், 8-ம் வகுப்பிற்கு மேல் பயிலும் மாணவ-மாணவிகள் என்றால் மதிப்பெண் பட்டியல், புகைப்படங்கள் 2, செல்போன் எண்களுடன். உதவி உபகரணங்கள் பெறுவதற்கான விண்ணப்பம் (மாற்றுத்திறனாளி அடையாள அட்டை நகல்), குடும்ப அட்டை நகல், புகைப்படங்கள் 2, செல்போன் எண், திருமண உதவித்தொகை விண்ணப்பம் பெற, மாற்றுத்திறனாளி அடையாள அட்டை நகல், திருமண பத்திரிக்கை, ஆதார் கார்டு நகல், முதல் திருமணம் என்பதற்கான சான்று, மாற்றுத்திறனாளி, மாற்றுத்திறனாளியை திருமணம் செய்துகொண்டார்.

சான்று, மாற்றுத்திறனாளி அல்லாத நபரை திருமணம் செய்துகொண்டால் அதற்கான சான்று, வங்கி கணக்கு புத்தக நகல், மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை பெற மனவளர்ச்சி குன்றியோர் எனில் பாதுகாவலருடன் இணைத்து வங்கி கணக்கு தொடங்கிய புத்தக நகல், பாதுகாவலர் புகைப்படம் 1, மாற்றுத்திறனாளி புகைப்படம் 1, வருவாய்த்துறை மூலம் உதவித்தொகை ரூ.1500 பெறுகிறீர்கள் அல்லது பெறவில்லை என்பதற்கான தங்கள் பகுதிக்கு உட்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து முத்திரையுடன் சான்றொப்பம். மேலும், இது தொடர்பான விவரங்களை பொதுமக்கள் பயன்படுத்த இ-சேவை மையம் அல்லது //www.tnesevai.tn.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post தென்னங்சோலை வனம் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Related Stories: