×

திருவிடைமருதூர் வண்ணக்குடி ஊராட்சியில் ரேஷன் கடை கட்டிடம் திறப்பு

திருவிடைமருதூர், நவ.10: திருவிடைமருதூர் ஒன்றியம் வண்ணக்குடி ஊராட்சியில், அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2024-2025-ன் கீழ் பொது விநியோக கட்டிடம் ரூ. 9.45 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. இதனை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.விழாவில் முன்னாள் எம்பி இராமலிங்கம், உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன், ஒன்றிய பெருந்தலைவர் சுபா, ஒன்றிய துணை பெருந்தலைவர் பத்மாவதி கிருஷ்ணராஜ் ஆகியோரின் வழிகாட்டுதலின் படி ஊராட்சி மன்ற தலைவர் கஸ்தூரி கார்த்தி மற்றும் துணைத் தலைவர் சத்யா பிரபாகரன் முன்மொழிந்து மேற்படி திறப்பு விழாைவ நடத்தினர்.

மேலும் திருவிடைமருதூர் ஒன்றிய ஆணையர். அருளாளன், வட்டார வளர்ச்சி அலுவலர் வீரமணி, பொறியாளர் மணிமாறன், மேற்பார்வையாளர் சாரதி மற்றும் ஊராட்சி செயலர் ஜீவாமேரி பொறுப்பாளர்களாக முன் நின்று விழாவை நடத்தினர்.மேலும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ராஜேஸ்வரி, ஜானகி, சுரேஷ், மாரிமுத்து மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் விழாவில் விற்பனையாளர் வினோத் அனைவருக்கும் நன்றி கூறி பொதுமக்களுக்கு பொருட்கள் விநியோகத்தை துவக்கி வைத்தார்.

The post திருவிடைமருதூர் வண்ணக்குடி ஊராட்சியில் ரேஷன் கடை கட்டிடம் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Ration Shop Building ,Vannakudi Oratchi ,Thiruvaymarathur Thiruvidaymarathur ,Thiruvudaymarathur Union ,Vannakudi Oradchi ,Distribution ,Deputy Chief Minister ,Adyanidhi Stalin ,Thiruvudaymarathur ,Vankudi Uratchi ,
× RELATED அருப்புக்கோட்டை அருகே சுக்கில்நத்தம்...