திருக்கோயிலுக்குச் சொந்தமான 31 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் நில அளவையாளர்கள் மூலம் அளவீடு!!

சென்னை : திருக்கோயிலுக்குச் சொந்தமான 31 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் நில அளவையாளர்கள் மூலம் அளவீடு செய்யப்பட்டுள்ளது.. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் பல்வேறு திருக்கோயில்களில் ஆய்வு மேற்கொண்டு திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். தமிழ்நாடு முழுவதும் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில் நிலங்கள் நவீன ரோவர் உபகரணங்களை பயன்படுத்தி அளவீடு செய்யும் பணிகள் தொடங்கப்பட்டு, மண்டல வாரியாக தூத்துக்குடி மாவட்டத்தில் 3660.54 ஏக்கரும், திருச்சி மாவட்டத்தில் 3151.14 ஏக்கரும், திருப்பூர் மாவட்டத்தில் 3043.77 ஏக்கரும், திருநெல்வேலி மாவட்டத்தில் 2705.79 ஏக்கரும், சிவகங்கை மாவட்டத்தில் 1897.51 ஏக்கரும்,  உட்பட பல்வேறு மாவட்டங்களில் இதுவரை 31670.64 ஏக்கர் நிலங்கள் அளக்கப்பட்டுள்ளது. அளவீடு செய்யப்பட்ட நிலங்களில் விழுப்புரம் மாவட்டத்தில் 106 கற்களும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 167 கற்களும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 98 கற்களும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் 400 கற்களும் உட்பட பல்வேறு மாவட்டத்தில் HRCE என்ற பெயர் பொறிக்கப்பட்ட எல்லைக்கல் ஊண்டி கம்பிவேலி அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும், மீதமுள்ள நிலங்களை 150 நில அளவையர்கள் மூலம் 56 ரோவர் கருவிகளைக் கொண்டு அளவீடு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை விரைந்து முடிக்க வட்டாட்சியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் திருக்கோயில் நிலங்களை கண்டறிவதுடன் ஆக்கிரமிப்புதாரர்களிடமிருந்து நிலங்களை பாதுக்காத்து திருக்கோயிலுக்கு வருவாய் ஈட்ட ஏதுவாக இருக்கும். …

The post திருக்கோயிலுக்குச் சொந்தமான 31 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் நில அளவையாளர்கள் மூலம் அளவீடு!! appeared first on Dinakaran.

Related Stories: