திண்டுக்கல் அரசு ஐடிஐ.யில் அக்.9ல் தொழில் பழகுநர் சேர்க்கை முகாம்

திண்டுக்கல், அக். 7: திண்டுக்கல் அரசு ஐடிஐ. வளாகத்தில் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், அரசு ஐடிஐ. இணைந்து நடத்தும் தொழில் பழகுநர் சேர்க்கை முகாம் அக்.9ம் தேதி நடைபெறவுள்ளது என கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்தததாவது: திண்டுக்கல் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் மற்றும் அரசு ஐடிஐ இணைந்து நடத்தும் தொழில் பழகுநர் சேர்க்கை முகாம் திண்டுக்கல் குள்ளனம்பட்டியில் உள்ள அரசு ஐடிஐ வளாகத்தில் அக்.9ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது.

இம்முகாமில் திண்டுக்கல்லில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான தொழிற்பிரிவுகளில் தொழில் பழகுநர் பயிற்சி வழங்க, பயிற்சியாளர்களை தேர்வு செய்யவுள்ளனர். இதில் ITI படித்த ஆண், பெண் இருபாலரும் கலந்து கொண்டு பயன் பெறலாம். தற்போது தொழில் பழகுநராக சேர்க்கை செய்யப்படும் பயிற்சியாளர்களுக்கு மாதாந்திர உதவித்தொகையாக குறைந்தபட்சம் ரூ.8,000 முதல் ரூ.12,000 வரை வழங்கப்படும்.

எனவே, இதுவரை தொழில் பழகுநர் பயிற்சி முடிக்காத அரசு மற்றும் தனியார் தொழில் பயிற்சி நிலையங்களில் தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள் ஆண், பெண் இருபாலரும் மேற்படி முகாமில் கலந்து கொண்டு இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநரை 0451- 2970049 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post திண்டுக்கல் அரசு ஐடிஐ.யில் அக்.9ல் தொழில் பழகுநர் சேர்க்கை முகாம் appeared first on Dinakaran.

Related Stories: