தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிக்க திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முடிவு.!

புதுச்சேரி: தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிக்க திமுக, காங்கிரஸ் கட்சிகள் முடிவு செய்துள்ளன. துணைநிலை ஆளுநரின் செயல்பாடுகள் பாஜக உறுப்பினர்களின் செயல்பாடு போல் இருப்பதாக கூறி தேநீர் விருந்தை புறக்கணிக்க திமுக, காங்கிரஸ் கட்சிகள் முடிவு செய்துள்ளன. தமிழ் புத்தாண்டையொட்டி தமிழக அரசியல் கட்சிகளுக்கு அண்மையில் தேநீர் விருந்தில் பங்கேற்க ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்தார். ஆளுநரின் இந்த தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முதலில் தெரிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள், இந்தியன் கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஆளுநர் செயல்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவரது விருந்தில் பங்கேற்கவில்லை என்று அறிவித்தன. அதனைத் தொடர்ந்து திமுகவும், காங்கிரஸ் கட்சியும் ஆளுநர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்தன. இதனிடையே, இவ்விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த பாஜக தலைவர் அண்ணாமலை, ஆளுநரின் தேநீர் விருந்தை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினரும் புறக்கணித்ததால் ஆளுநர் மாளிகைக்கு டீ செலவு மிச்சம் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார். இந்நிலையில், தமிழகத்தை போல், புதுச்சேரியிலும் சித்திரை முழு நிலவு தேநீர் விருந்தில் பங்கேற்க துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தார். இதைத்தொடர்ந்து, ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அளிக்கும் சித்திரை முழு நிலவு தேநீர் விருந்தை காங்கிரஸ் கட்சி புறக்கணிப்பதாக அக்கட்சியின் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். காங்கிரஸை தொடர்ந்து, திமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் மற்றும் மதிமுக உள்ளிட்ட தோழமைக் கட்சிகளும் தேநீர் விருந்தை புறக்கணிக்க முடிவு செய்துள்ளன….

The post தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிக்க திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முடிவு.! appeared first on Dinakaran.

Related Stories: