தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே பல அடுக்கில் கட்டப்பட்டுள்ள ₹ 2.50 கோடியில் வாகன நிறுத்துமிடம் பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம்

தஞ்சாவூர், நவ.28: தஞ்சாவூர் மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற்றது. தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்விக் கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 380 மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் வழங்கினர். மனுக்களை பெற்றுக்கொண்டு மனுக்கள் மீது தீர்வு காண சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி உரிய நடவடிக்கைகள் எடுக்கும்படி கலெக்டர் உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) காந்த், மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சங்கர் மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்:
தஞ்சாவூர் அன்னை சத்யா நகர், சுண்ணாம்பு கால்வாய் ரோடு, வடக்கு வாசல் பகுதியை சேர்ந்த திருநங்கை தர்ஷினி அளித்த மனுவில், நான் வாடகை வீட்டில் வசித்து வருகிறேன். தற்போது வாடகை வீட்டிற்கு என்னால் பணம் கொடுக்க முடியாத நிலையில் உள்ளேன். அதேபோல் திருநங்கைகளுக்கு வீடு வாடகைக்கு கேட்டால் கொடுக்க மறுக்கிறார்கள். மேலும் வாடகை கொடுத்து இருப்பதற்கு மிகவும் கடினமாக உள்ளது. நாங்கள் சுயமாக வாழ்ந்து முன்னேற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நிலையில் திருநங்கை ஆகிய எங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. தமிழக அரசால் வழங்கப்படும் உரிமைத் தொகையை பெற்றுத் தரக்கோரி முதியவர்கள் நேற்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

திருவையாறு பகுதியை சேர்ந்த லில்லி ஜாக்லின், மெலட்டூரை சேர்ந்த ராணி, சாரா மேரி ஆகியோர் நேற்று அளித்த மனுவில் கூறியதாவது:
தமிழக அரசு சார்பாக வழங்கப்படும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 எங்களுக்கு கிடைக்கப்பெறாமல் உள்ளது. இது குறித்து திருவையாறு மற்றும் பாபநாசம் தாசில்தாரிடம் கேட்டதற்கு உங்களின் விண்ணப்பம் பரிசீலனையில் உள்ளதாக கூறி வருகிறார்கள். நாங்கள் தினமும் விவசாய வேலை செய்து பிழைத்து வருகிறோம். கலைஞர் உரிமைத்தொகை கிடைத்தால் எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுத்து உரிமைத்தொகையை பெற்று தர வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளனர்.

ரேஷனில் அனைத்து பொருட்களும் வழங்க வேண்டும்: பாபநாசம் தாலுகா சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்தவர்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:
பாபநாசம் தாலுகா சத்தியமங்கலம் பகுதியில் பகுதி நேர ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. அங்கு 500க்கும் மேற்பட்டவர்கள் பொருள் வாங்கி வருகிறார்கள். அந்த ரேஷன் கடையானது மாதத்திற்கு மூன்று நாட்கள் மட்டுமே திறக்கப்பட்டு பொருள் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் அந்த ரேஷன் கடையில் அரிசி மட்டுமே வழங்கப்படுகிறது. கோதுமை, சர்க்கரை, பாமாயில், பருப்பு உள்ளிட்ட பொருட்களும் கிடைக்க ஆவணம் செய்ய வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளனர்.

தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் முகமது இப்ராஹிம் தலைமையில் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் அளித்த மனுவில் கூறியதாவது: தஞ்சாவூர் மாவட்டம் குருங்குளத்தில் கீழ்பாதி அருகில் உள்ள கிராமங்களில் சுமார் 500 மேற்பட்ட இளைஞர்கள் உள்ளனர். பல காலமாக குளங்குளத்தில் கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் விளையாட்டு திடல் உள்ளது. அதில் இளைஞர்கள் விளையாடுவது வழக்கம். இந்த இடம் ஊராட்சி நிர்வாகத்தில் இளைஞர்களுக்கு விளையாட ஒதுக்கப்பட்ட இடமாகும். இந்த இடத்தில் தற்போது ஊராட்சி நிர்வாகம் மரங்களை நடுவதற்கு குழிதோண்டி மரங்களை நடமுயற்சி செய்து வருகிறது. விளையாட்டு திடலில் மரம் நடக்கூடாது என அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ஊராட்சி மன்ற தலைவர், தஞ்சாவூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் தெரிவித்தும் கண்டுகொள்ளாமல் மரம் நடுவதற்கான தீவிய முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

எனவே மரங்களை வேறு இடத்தில் நட்டு விளையாட்டு திடலை எங்கள் பயன்பாட்டிற்கு கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

The post தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே பல அடுக்கில் கட்டப்பட்டுள்ள ₹ 2.50 கோடியில் வாகன நிறுத்துமிடம் பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: