தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரியில் பாத மருத்துவ மைய பயிற்சி வகுப்பு

 

தஞ்சாவூர், நவ.17: தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடைபெற்ற பாத மருத்துவ மையம் பயிற்சி வகுப்பை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தொடங்கி வைத்தார். தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரியில் பாத மருத்துவ மையம் இயங்கி வருகிறது. இங்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் பாத மருத்துவ மையம் குறித்த காணொளி காட்சி வாயிலாக நேரடி பயிற்சி வகுப்பை கலெக்டர் தீபக் ஜேக்கப் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் கலெக்டர் பேசும்போது, தமிழக முதல்வர் மக்களைத் தேடி மருத்துவம் போன்ற சிறப்பான திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். ‘நடப்போம் நலம் பெறுவோம் திட்டம் நடைபயிற்சியை ஊக்குவிக்கும் விழிப்புணர்வு திட்டமாகும்’. நீரிழிவு பாதிப்பின்றி வாழ உடற்பயிற்சியை அனைவரும் பின்பற்ற வேண்டுமென தெரிவித்தார். நிகழ்ச்சியில் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜிநாதன் உள்ளிட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

The post தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரியில் பாத மருத்துவ மைய பயிற்சி வகுப்பு appeared first on Dinakaran.

Related Stories: