ஞாயிறு முழு ஊரடங்கிலும் கொரோனா அச்சமின்றி சோளிங்கர் பஸ் நிலையத்தில் கிரிக்கெட் விளையாடிய சிறுவர்கள்

சோளிங்கர் : இந்தியாவில் கொரோனா 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ஞாயிறு தோறும் முழு ஊரடங்கை பின்பற்ற அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஞாயிறுற்றுக்கிழமையான நேற்று ஊரடங்கால் சோளிங்கரில் கடைகள், ஓட்டல்கள், காய்கறி மார்க்கெட், இறைச்சி மார்க்கெட் ஆகியவை அடைக்கப்பட்டிருந்தது. பஸ் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டிருந்தது.இதனால் சோளிங்கரில்  மக்கள் நடமாட்டம் இன்றி தெருக்கள், சாலைகள் வெறிச்சோடி கிடந்தது. இந்நிலையில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் சோளிங்கர் பஸ் நிலையத்தில் போக்குவரத்து மற்றும் ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி கிடந்ததால் அப்பகுதியை சேர்ந்த சிறுவர்கள், இளைஞர்கள் பஸ் நிலையத்தில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தனர். வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நாளில் போலீசார் பாதுகாப்பு பணிக்காக சென்றுவிட்டனர். அதனை பயன்படுத்திக்கொண்டு சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடியது அப்பகுதியில் கொரோனா பரவும் சூழல் நிலவியது பார்த்து அப்பகுதி மக்கள் வேதனையுடன் பார்த்து சென்றனர்….

The post ஞாயிறு முழு ஊரடங்கிலும் கொரோனா அச்சமின்றி சோளிங்கர் பஸ் நிலையத்தில் கிரிக்கெட் விளையாடிய சிறுவர்கள் appeared first on Dinakaran.

Related Stories: