ஜம்மு- காஷ்மீரில் பக்தர்களுக்காக குறுகிய காலத்தில் அமைக்கப்பட்ட புதிய பாலம்..!!

ஸ்ரீநகர்: ஜம்மு- காஷ்மீரின் கஸ்த்வார் மாவட்டத்தில் பக்தர்களுக்காக குறுகிய காலத்தில் 170 அடி பாலத்தை அமைக்க ராணுவம் உதவியுள்ளது. கஸ்த்வார் மாவட்டத்தில் கொரோனா காரணமாக 2 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த மச்சைல் மாதா கோயிலுக்கான புனித யாத்திரை இன்று தொடங்குகிறது. இந்த கோயிலுக்குச் செல்லும் வழியில் கட்டப்பட்டிருந்த ஆற்றுப்பாலம் அண்மையில் பெய்த கனமழையில் அடித்துச் செல்லப்பட்டது. இந்நிலையில், பக்தர்களின் பயணத்திற்காக ஆற்றைக் கடக்க குறுகிய காலத்தில் 170 அடி பாலத்தை அமைக்க ராணுவம் உதவியுள்ளது. ராஷ்ட்ரிய ரைஃபிள் படை பொறியியல் குழுவுடன் இணைந்து ராணுவம் மேற்கொண்ட பணிகளால் பாலத்தின் கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டு பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.  …

The post ஜம்மு- காஷ்மீரில் பக்தர்களுக்காக குறுகிய காலத்தில் அமைக்கப்பட்ட புதிய பாலம்..!! appeared first on Dinakaran.

Related Stories: