ஜன.31ல் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம்

திண்டுக்கல், ஜன. 26: திண்டுக்கல் கம்பிளியம்பட்டியில் ஜன.31ம் தேதி மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது என கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: திண்டுக்கல் கிழக்கு வட்டம், கம்பிளியம்பட்டியில் ஆர்டிஓ கமலக்கண்ணன் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம் ஜன.31ம் தேதி (புதன் கிழமை) காலை 10.30 மணிக்கு கம்பளியம்பட்டி சமுதாய கூடத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் திண்டுக்கல் கிழக்கு வட்டத்தை சேர்ந்த அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் கலந்து கொண்டு, தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்து தீர்வு காணலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post ஜன.31ல் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: