திருச்சி, ஜூலை 7: 16வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கான அகில இந்திய டென்னிஸ் சங்கம் சாம்பியன்ஷிப் திரு ச்சி சலஞ்சர்ஸ் டென்னிஸ் அகாடமியில் நடந்தது.
இதில் கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, கேரளா மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்தும், தமிழகத்திலிருந்தும் 128 முன்னணி ஜூனியர் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். ஆடவர் ஒற்றையர் பிரிவில் ரிதிஷ் அபினவ் 6-2,6-4 என்ற செட் கணக்கில் ஹேம்தேவ் மகேஷ்யை வீழ்த்தினார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் எஷிதா யாலாயா 6-4,6-1 என்றநேர் செட்களில் பூஜா நாகராஜை வீழ்த்தினார். இப்போட்டி, 16 வயதுக்கு ட்பட்ட சிறுவர் மற்றும் சிறுமிகளின் ஒற்றையர் மற்றும் இரட்டையர்பிரி வுகளில் உயர்மட்ட போட்டிகளை கொண்டி ருந்ததுடன், இந்திய டென் னிஸில் வளர்ந்து வரும் திறமைகளுக்கு ஒரு முக்கிய தளமாக அமைந்தது.
The post சேலஞ்சர்ஸ் டென்னிஸ் அகாடமியில் தேசிய டென்னிஸ் சாம்பியன்ஷிப் appeared first on Dinakaran.
