சுற்றுலா பொங்கல் விழா

கிருஷ்ணகிரி, ஜன.18: கிருஷ்ணகிரி அடுத்த அவதானப்படடி சிறுவர் பூங்கா அருகில் சுற்றுலா பொங்கல் விழா நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், பெரியமுத்தூர் ஊராட்சி அவதானப்பட்டி சிறுவர் பூங்கா மற்றும் படகு இல்லத்தில் நேற்று, தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை சார்பில் சுற்றுலா பொங்கல் விழா நடந்தது. விழாவிற்கு கலெக்டர் சரயு தலைமை வகித்து, விழாவை தொடங்கி வைத்தார். பின்னர், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். விழாவில், சுற்றுலாத்துறையின் சார்பில் பாரதி கிராம கலைக்குழுவினரின் தப்பாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், சாட்டை குச்சி ஆட்டம், மயிலாட்டம் ஆகிய கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. சுற்றலாப் பயணிகளுக்கு கோலப்போட்டி, இசை நாற்காலி போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் பரிசுகளை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட சுற்றுலா அலுவலர் ஆனந்தன், கிருஷ்ணகிரி தாசில்தார் விஜயகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன், ஊராட்சி மன்ற தலைவர் பானுப்பிரியா நாராயணன், சிறுவர் பூங்கா மற்றும் படகு இல்ல ஒப்பந்ததாரர்கள் சிவா, பழனி மற்றும் அரசு அலுவலர்கள், சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post சுற்றுலா பொங்கல் விழா appeared first on Dinakaran.

Related Stories: