சர்க்கரைவள்ளிக் கிழங்கு

உலகில் அதிகம் சாகுபடியாகும் பயிர்களில் சர்க்கரைவள்ளிக் கிழங்கும் ஒன்றும். உருளைக் கிழங்கை விடவும் அதிகப்படியான மாவுச்சத்தும் குளுக்கோஸும் கொண்டதால் உடனடி எனர்ஜிக்கு மிகவும் ஏற்றது. ஆப்பிரிக்க நாடுகளில் இதன் தேவை இன்று அதிகமாக உள்ளது. பெயரில் மரவள்ளிக் கிழங்கோடு தொடர்பு கொண்டிருந்தாலும் சர்க்கரைவள்ளிக் கிழங்கு ஓரளவு உருளைக் கிழங்கோடு அதிக தொடர்பு உடையது. ட்யூபர் எனப்படும் வேர்க் கிழங்கு வகையைச் சேர்ந்த தாவரம். கொடியாக நிலத்தில் படர்ந்து வளரும் இதன் இலைகள் சற்று இதய வடிவிலானவை. சர்க்கரைவள்ளிக் கிழங்கில் பலவகைகள் உள்ளன. வெள்ளை, சிவப்பு, ஊதா, கத்திரிப்பூ நிறம், ஆரஞ்சு எனப் பலவிதமான நிறங்களில் இவை உள்ளன. மேலும், ஒவ்வொன்றிலும் பல்வேறு வகைகளும் உள்ளன. சிவப்பு, ஊதா, ஆரஞ்சு வண்ண சர்க்கரைவள்ளிக் கிழங்களோடு ஒப்பிட வெள்ளை சர்க்கரைவள்ளிக் கிழங்கின் இனிப்புச் சுவையும் ஈரத்தன்மையும் சற்றுக் குறைவாக இருக்கும். அமெரிக்க கண்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட சர்க்கரைவள்ளிக் கிழங்கில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரகங்கள் உள்ளன. இதில், ஐபோமோயா பட்டாடாஸ் (Ipomoea batatas) என்ற ரகம்தான் உலகில் அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது. இதைத் தவிர ஐ.அக்வாடிக்கா என்ற ரகமும் அதிகமாகப் பயிரிடப்படுகிறது. சர்க்கரைவள்ளிச் செடியின் பூ குழல் வடிவில் இருக்கும். இதன் சில ரகங்கள் கிழங்குக்காக அல்லாமல் அலங்காரப் பூக்களுக்காகவும் வளர்க்கப்படுகின்றன. யாம் எனப்படும் கருணைக் கிழங்குடன் சர்க்கரைவள்ளிக் கிழங்கை சிலர் குழப்பிக்கொள்கிறார்கள். இரண்டு வேறு வேறு பண்புகள் கொண்ட தாவரங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, வடக்கு அமெரிக்க கண்டத்தில் சர்க்கரைவள்ளிக் கிழங்கின் சில வகைகளை யாம் என்றே இன்றும் சொல்கிறார்கள். கொலம்பஸின் படையணிகள் அமெரிக்க கண்டத்துக்குள் நுழைந்தபோது அவர்கள் சர்க்கரைவள்ளிக் கிழங்கு கொடுத்துதான் வரவேற்கப்பட்டார்கள். அநேகமாக, பூர்வ அமெரிக்கர்களைத் தவிர முதன் முதலில் சர்க்கரைவள்ளிக் கிழங்கைச் சுவைத்தவர்கள் கொலம்பஸும் அவரது சகாக்களாகவும்தான் இருக்க வேண்டும். பின்னாட்களில் அமெரிக்க கண்டத்துக்குச் சென்ற கடலோடிகள் அங்கு சர்க்கரைவள்ளிக் கிழங்கு போலவே பலவகையான கிழங்கு வகைகள் இருப்பதைக் கண்டு அவற்றுக்கு பெயர் வைப்பதில் நிறைய குழம்பினார்கள். அர்ஹெந்தினா, வெனின்சுலா, ப்யூர்டோரிகா, டோமினிக் குடியரசு ஆகிய நாடுகளில் இதை பட்டாட்டா என்கிறார்கள். மெக்சிகோ, பெரு, சிலி, மத்திய அமெரிக்க நாடுகளில் கமோட்டி என்கிறார்கள். பெருவின் சில பகுதிகளில் யாரோ ஓர் ஆள் பெயரைச் சொல்வதைப் போல குமார், குமரா என்கிறார்கள். நம் ஊரில் வள்ளிக் கிழங்கைப் போல் இருப்பதால் இனிப்பு மரவள்ளி, சீனி மரவள்ளி, சிவப்பு மரவள்ளி, சர்க்கரை வள்ளி எனப் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. மத்திய அமெரிக்காவில் கடந்த ஐந்தாயிரம் ஆண்டுகளாக சர்க்கரைவள்ளிக் கிழங்கு சாகுபடி நடந்துவருகிறது. கொலம்பஸின் வருகைக்குப் பிறகே ஐரோப்பாவுக்கும் அங்கிருந்து உலகின் பிற பகுதிகளுக்கும் பரவியது. இன்று அதிகமாகப் பயிரிடப்படும் ஐ.பட்டாட்டாவின் பூர்விகம் மெக்சிக்கோதான். இவை கிழங்காக நடப்பட்டதைவிடவும் செடியாக நடப்பட்டே வளர்க்கப்பட்டிருக்கின்றன. சுமார் ஆயிரம் வருடங்களுக்குக் முற்பட்ட சர்க்கரைவள்ளிக் கிழங்கின் படிமங்கள் மெக்சிக்கோவில் கிடைத்துள்ளன. பாலினேஷியாவில் சர்க்கரைவள்ளிக் கிழங்கு வளர்ப்பு ஆயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பே இருந்திருக்கிறது என்கிறார்கள். அமெரிக்காவுக்குப் பயணித்த பாலினேஷியர்கள் வழியாகவே நியூசிலாந்து வரை இது பரவியது என்றும் சொல்கிறார்கள்….

The post சர்க்கரைவள்ளிக் கிழங்கு appeared first on Dinakaran.

Related Stories: