சந்தனக்கூடு ஊர்வலம்

சிங்கம்புணரி, செப்.26: சிங்கம்புணரி அருகே சுற்றுலாத் தலமாக விளங்கும் பரம்பு மலை என்னும் பிரான் மலையில் ஷேக் அப்துல்லா அவுலியா தர்கா புகழ் பெற்றதாகும். இந்த தர்காவில் சந்தனக்கூடு திருவிழா ஊர்வலம் செவ்வாய் இரவு வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. பிரான்மலை ஐந்து ஊர் கிராமத்தார்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மூன்று சந்தன குடங்கள் பள்ளிவாசலில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு மின்னொளியில் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் சந்தன குடங்கள் வைக்கப்பட்டது. நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று 2500 அடி உயரம் உள்ள மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு மத நல்லிணக்கத்தோடு அனைவருக்கும் சந்தனம் சர்க்கரை வழங்கி சந்தனம் பூசும் விழா நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு.பாத்தியா ஓதி வழிபாடு செய்தனர்.

The post சந்தனக்கூடு ஊர்வலம் appeared first on Dinakaran.

Related Stories: