சத்துணவு பெண் ஊழியர் சரமாரி குத்திக்கொலை

கம்மாபுரம்: சத்துணவு பெண் ஊழியரை கத்தியால் குத்தி கொன்ற கணவர் போலீசில் சரணடைந்தார்.கடலூர் மாவட்டம் கம்மாபுரம் கிழக்கு காலனி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ராஜலட்சுமி(25) என்பவர் சத்துணவு ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கும், திட்டக்குடி அடுத்த ஆவினங்குடி கிராமத்தை சேர்ந்த கொத்தனார் நாகராஜனுக்கும் (32) கடந்த 2016ல் திருமணம் நடந்தது. இருவருக்கும் குழந்தை இல்லாததால் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று கணவன், மனைவி இடையே மீண்டும்  தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த நாகராஜன், ராஜலட்சுமியை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் கம்மாபுரம் காவல் நிலையத்தில் நாகராஜன் கத்தியுடன் சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்….

The post சத்துணவு பெண் ஊழியர் சரமாரி குத்திக்கொலை appeared first on Dinakaran.

Related Stories: