திருப்பூர், ஜன. 7: திருப்பூர் இணை ஆணையர் குமாரதுரை அறிவுரைப்படி, உதவி ஆணையர் ஜெயதேவி வழிகாட்டுதலின்படி கோவில் நிலங்கள் மீட்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருப்பூர் இடுவாய் பிச்சம்பாளையம் மாரியம்மன் விநாயகர் திருக்கோவிலின் உபகோவில்களான, அழகிய பெருமாள் திருக்கோவிலுக்கு சொந்தமான 11.48 ஏக்கர் நிலம், மாரியம்மன் திருக்கோவிலுக்கு சொந்தமான 10.72 ஏக்கர் நிலம், பல்லடத்து அம்மன் திருக்கோவிலுக்கு சொந்தமான 9.76 ஏக்கர் மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டு அதிகாரிகள் நில அளவை செய்து, எல்லை கற்கள் போடப்பட்டது. இதில் திருப்பூர் ஆலய நிலங்கள் தனி தாசில்தார் ரவீந்திரன், திருக்கோவில் செயல் அலுவலர் கார்த்திகை செல்வி, ஓய்வு பெற்ற தாசில்தார் சபாபதி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
The post கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் அளவீடு appeared first on Dinakaran.