கொப்பரை வரத்து அதிகரிப்பு ரூ.7.72 லட்சத்துக்கு வர்த்தகம்

பரமத்திவேலூர், ஏப். 14: பரமத்திவேலூர் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் நேற்று கொப்பரை ஏலம் நடந்தது. பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 10,112 கிலோ கொப்பரையை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். இதை கொள்முதல் செய்ய நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்துகொண்டனர். ஏலத்தில் கொப்பரை கிலோ அதிகபட்சமாக ரூ.85க்கும், குறைந்தபட்சமாக ரூ.57.89க்கும், சராசரியாக ரூ.77.90க்கும் ஏலம் போனது. ஒட்டு மொத்தமாக ரூ.7.72 லட்சத்துக்கு ஏலம் போனதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post கொப்பரை வரத்து அதிகரிப்பு ரூ.7.72 லட்சத்துக்கு வர்த்தகம் appeared first on Dinakaran.

Related Stories: