கூடலூர் அரசு பள்ளியில் பேவர் பிளாக் சாலை: எம்எல்ஏ திறந்து வைத்தார்

 

கூடலூர், ஜூலை 11: கூடலூர் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.13 லட்சத்தில் பேவர்பிளாக் சாலைகள் அமைக்கப்பட்டது. அதனை எம் எல் ஏ மகாராஜன் திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து இப்பள்ளி மாணவர்கள் கடந்த ஆண்டு 10 மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றனர். இதற்கு உறு துணையாக செயல்பட்ட பள்ளி ஆசிரியர்களை பாராட்டும் விதமாக நகர்மன்ற தலைவர் பத்மாவதி லோகந்துரை தலைமயில் எம்.எல்.ஏ.மகாராஜன் பள்ளி ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் காஞ்சனா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர், திமுக நகரச் செயலாலளர் லோகந்துரை, நகர்மன்ற உறுப்பினர் சிலம்பரசன், தலைமை ஆசிரியர் டேனியல் ஆகியோர் உள்பட பலர் கலந்துகொண்டனர். பின் கூடலூர் 9-வது வார்டு ராஜீவ் காந்திநகர் பகுதியில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தையும் எம்எல்ஏ மகாராஜன் திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து கூடலூர் 21-வது வார்டு பகுதியான லோயர்கேம்ப் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு புதிய இருக்கைகள் வழங்கப்பட்டது. தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன், நகர்மன்ற உறுப்பினர் தினகரன், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கட்சி பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

The post கூடலூர் அரசு பள்ளியில் பேவர் பிளாக் சாலை: எம்எல்ஏ திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: