கும்பகோணம் மறை மாவட்டத்தின் 125ம் ஆண்டு விழாபூண்டி மாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி

திருக்காட்டுப்பள்ளி, செப். 3: பூண்டி மாதா பேராலயத்தில் கும்பகோணம் மறை மாவட்டம் 125ம் ஆண்டு விழா சிறப்பு திருப்பலி ஆயர் தலைமையில் நடந்தது.தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா பேராலயத்தில் கும்பகோணம் மறை மாவட்டம் தனியாக துவங்கி 125 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் விதமாக நேற்று முன்தினம் பூண்டியில் ஆயர் அந்தோணிசாமி தலைமையில் மறை மாவட்ட ஆலோசனை குழுவில் உள்ள குருக்கள் மற்றும் பங்குத்தந்தைகள் மறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பங்குத் தந்தைகளின் வழிகாட்டுதலில் அருட் சகோதரிகள் மற்றும் பங்கு மக்கள் கலந்து கொண்டு சிறப்பு திருப்பலி மேற்கொண்டனர்.

இந்த 125 ஆண்டுகளும் சிறப்பாக செயல்படவும் வழி நடத்தி செல்லவும் ஒத்துழைத்த இறைவனுக்கும், இறை மக்களுக்கும் நன்றிகள் நன்றிகளை தெரிவித்தார். குடந்தை மறை மாவட்டத்தில் இந்த 125ம் ஆண்டை கொண்டாடும் விதமாக அனைத்து மக்களுக்கும் பயன் தரும் வகையில் செய்ய வேண்டிய செயல் திட்டங்களை விளக்கமாக தெரிவித்தார். விழா ஏற்பாடுகளை பேராலய அதிபர் சாம்சன், துணை அதிபர் ரூபன் அந்தோணிராஜ், உதவி பங்குத்தந்தைகள் மற்றும் பங்கு மக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

The post கும்பகோணம் மறை மாவட்டத்தின் 125ம் ஆண்டு விழாபூண்டி மாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி appeared first on Dinakaran.

Related Stories: