குன்னூரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு

 

குன்னூர், ஜூலை 31: குன்னூரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் ஒரு லிட்டர் பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த கடைகளுக்கு வருவாய்த்துறையினர் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர். நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் ஒரு முறை பயன்படுத்தி விட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் தட்டு, டம்ளர்,ஸ்பூன், ஸ்ட்ரா, முலாம் பூசப்பட்ட காகித தட்டுககள், பிளாஸ்டிக் வாழைஇலை வடிவ தாள்,பிளாஸ்டிக் தொரணங்கள், கொடிகள் போன்ற உள்ளிட்ட 19 வகையான பொருட்கள் பயன்படுத்த தடை உள்ளது.

இதுதவிர ஒரு லிட்டர் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவ்வப்போது மாவட்டம் முழுவதும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. குன்னூர் நகரில் ஆப்பிள் பி சாலை உள்ளிட்ட இடங்களில் அமைந்துள்ள கடைகள், வணிக நிறுவனங்களில் குன்னூர் ஆர்டிஒ., பூஷணகுமார் தலைமையில் வட்டாட்சியர் கனிசுந்தரம் மற்றும் வருவாய்த்துறையினர் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின் போது கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள்,ஒரு லிட்டர் குடிநீர் பாட்டில்கள், குளிர்பான பாட்டில்கள் பாட்டில்கள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்து ரூ.25 ஆயிரத்து 500 அபராதம் விதித்தனர். பிளாஸ்டிக் பயன்படுத்துவது தொடர்ந்தால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் எனவும் எச்சரித்தனர்.

The post குன்னூரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு appeared first on Dinakaran.

Related Stories: