கீழ்வேளூரில் இல்லம்தோறும் திமுக இளைஞரணி தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம்

கீழ்வேளூர், செப்.24: நாகை மாவட்டம் கீழ்வேளூர் வடக்கு, தெற்கு ஒன்றியம் மற்றும் கீழ்வேளூர் பேரூரில் இல்லம்தோறும் இளைஞரணி உறுப்பினர் சேர்த்தல் முகாம் கீழ்வேளூர் சந்தியாதோப்பில் நடைபெற்றது. முகாமிற்கு மாநில இளைஞர் அணி துணை செயலாளர் இளையராஜா தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர், கீழ்வேளூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கோவிந்தராசன், பேரூர் செயலாளர் அட்சயலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கார்த்தி வரவேற்றார். இல்லம்தோறும் இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கும் பணியை நாகை மாவட்ட திமுக செயலாளரும், தமிழ்நாடு மீன் வளர்சசி கழகத் தலைவருமான கவுதமன் தொடங்கி வைத்து, ஏற்கனவே இளைஞர் அணி உறுப்பினராக சேர்க்கப்பட்டவர்களுக்கு உறுப்பினர் அட்டையை வழங்கி பேசினார்.

முகாமில் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் சுரேஷ், மாவட்ட சுற்றுசூழல் அணி தலைவர் ராஜா, மாவட்ட அயலக அணி மாவட்ட அமைப்பாளர், மாவட்ட பிரதிநிதிகள் கல்யாணசுந்தரம், வீரமணி, நெங்கராஜ், ஷேக், ஒன்றிய துணைச் செயலாளர்கள் வேதநாயகம், வெண்ணிலா, பொருளாளர் பாரதி, பேரூராட்சி துணைத் தலைவர் சந்திரசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post கீழ்வேளூரில் இல்லம்தோறும் திமுக இளைஞரணி தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் appeared first on Dinakaran.

Related Stories: