கீரணூர் ஊராட்சியில் சிசிடிவி கேமரா துவக்கி வைப்பு

காங்கயம், ஆக.3: காங்கயம் அடுத்த கீரணூர் ஊராட்சி பகுதியில் குற்ற சம்பங்களை தடுக்கும் விதமாக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊராட்சி மன்ற தலைவர்கள் உடனான ஆலோசனை கூட்டத்தில் கிராம பகுதிகளில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தினால் குற்ற சம்பவங்களை குறைக்க முடியும் என மாவட்ட ஆட்சியரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் அறிவுரை வழங்கினார்.
இந்த நிலையில் காங்கயம் ஒன்றியம் கீரணூர் ஊராட்சிக்கு உள்பட முக்கிய சாலைகள் சந்திக்கும் 15க்கும் மேற்பட்ட இடங்ககளில் முதற்கட்டமாக 15 கேமராக்கள் பொறுத்தபட்டது. இதில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஒரு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டது. அதற்கான திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

ஊராட்சி மன்ற தலைவர் ஈஸ்வரமூர்த்தி தலைமை தாங்கினார். காங்கயம் டிஎஸ்பி பார்த்திபன் சிசிடிவி கேமிராக்கள் செயல்பாட்டை துவங்கி வைத்து பார்வையிட்டார். சிசிடிவி கேமராவை பொருத்தியுள்ள கிராமத்திற்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார். மேலும் கீரணூர் ஊராட்சி அலுவலக கட்டுப்பாட்டு அறையில் இருந்து காங்கயம் காவல்நிலைய கட்டுப்பாட்டு சிசிடிவி அறைக்கும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் காங்கயம் இனஸ்பெக்டர் காமராஜ், எஸ்.ஐ சந்திரன் மற்றும் கவுன்சிலர், வார்டு உறுப்பினர்கள் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post கீரணூர் ஊராட்சியில் சிசிடிவி கேமரா துவக்கி வைப்பு appeared first on Dinakaran.

Related Stories: