திருப்பூர் மாவட்டத்தில் விவசாயிகள் வண்டல் மண் எடுக்க அனுமதி பெறலாம்

 

திருப்பூர், ஜூலை 5: திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் படிந்துள்ள வண்டல் மண், களி மண்ணை விவசாய பணிகள் மற்றும் மண்பாண்ட தொழிலுக்காக இலவசமாக எடுத்து செல்ல அனுமதி வழங்குவது குறித்து திருப்பூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 9 நீர்நிலைகள் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 276 நீர்நிலைகள் என மொத்தம் 285 நீர்நிலைகளில் விவசாய பணிகள் மற்றும் மண்பாண்ட தொழிலுக்காக வண்டல் மண் மற்றும் களி மண்ணை இலவசமாக எடுத்து செல்ல நீர்நிலைகள் குறித்த அட்டவணை பிரசுரம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி விவசாயிகள் மற்றும் மண்டபாண்ட தொழிலாளர்கள் https://tnesevai.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம். வண்டல் மண், களி மண் எடுக்கப்பட வேண்டிய நீர்நிலைகள் குறித்த விவரம் www.tiruppur.nic.in என்ற இணையதளத்திலும், மாவட்ட கலெக்டர் அலுவலக தகவல் பலகையிலும் சம்பந்தப்பட்ட தாசில்தார் அலுவலகத்தை அணுகியும் தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

The post திருப்பூர் மாவட்டத்தில் விவசாயிகள் வண்டல் மண் எடுக்க அனுமதி பெறலாம் appeared first on Dinakaran.

Related Stories: