கார்ப்பரேட் நிறுவனங்களை விட சாமானியர்களின் வரி மூலம் அதிகம் சம்பாதிக்கிறது அரசு:ராகுல் தாக்கு

புதுடெல்லி: ‘கார்ப்பரேட் நிறுவனங்களை விட சாமானிய மக்களிடம் வசூலிக்கும் வரி மூலமாகத்தான் ஒன்றிய அரசு அதிகம் சம்பாதிக்கிறது’ என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று தனது பதிவில், ‘மக்கள் மீதான வரியை உயர்த்துங்கள், நண்பர்கள் மீதான வரியை குறைத்திடுங்கள் – இது தான் சூட் பூட் அரசின் கொள்கை’ என கூறி உள்ளார். இத்துடன், மக்கள் மீதான வரி மூலம் ஒன்றிய அரசு அதிக வருவாயை ஈட்டுவதை காட்டும் வரைபடம் ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார்.அந்த வரைபடத்தில், ஒன்றியத்தில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், கார்ப்பரேட் நிறுவனங்கள் மீதான வரி மூலம் வசூலிக்கப்பட்ட வருவாய் 40 சதவீதத்திற்கும் மேலாகவும், மக்கள் மீதான வரி மூலம் கிடைக்கும் வருவாய் 24 சதவீதமாகவும் இருப்பதாக காட்டப்பட்டுள்ளது. அதுவே 2014க்குப் பிறகு பாஜ ஆட்சியில், கார்ப்பரேட் நிறுவனங்கள் மீதான வரி மூலம் வசூலிக்கப்படும் வருவாய் 24 சதவீதமாக குறைந்து விட்டதும், மக்கள் மீதான வரியிலிருந்து வசூலிக்கப்படும் வருவாய் 48 சதவீதமாக அதிகரித்துள்ளதையும் காட்டுகிறது….

The post கார்ப்பரேட் நிறுவனங்களை விட சாமானியர்களின் வரி மூலம் அதிகம் சம்பாதிக்கிறது அரசு:ராகுல் தாக்கு appeared first on Dinakaran.

Related Stories: