சபரிமலைக்கு புதிய தந்திரி

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் செங்கணூர் பகுதியைச் சேர்ந்த தாழமண் தந்திரி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான் சபரிமலை கோயிலில் முக்கிய பூஜைகளை நடத்தி வருகின்றனர். சபரிமலை கோயில் குறித்த அனைத்து முக்கிய முடிவுகளையும் இந்தக் குடும்பத்தினர் தான் எடுப்பார்கள். தற்போது சபரிமலை தந்திரியாக கண்டரர் ராஜீவரர் மற்றும் கண்டரர் மகேஷ் மோகனர் ஆகியோர் உள்ளனர். இவர்கள் இருவரும் தான் இரு வருடங்களுக்கும் ஒருமுறை தந்திரி பொறுப்பில் இருப்பார்கள்.

இந்நிலையில் தந்திரி கண்டரர் ராஜீவரர் இந்தப் பொறுப்பிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளார். இதனால் இவருக்குப் பதிலாக அவரது மகன் கண்டரர் பிரம்மதத்தன் (30) புதிய தந்திரியாக நியமிக்கப்பட உள்ளார். வரும் ஆவணி மாதம் ஒன்றாம் தேதி முதல் இவர் சபரிமலை கோயில் தந்திரி பொறுப்பை ஏற்பார். சட்டத்தில் முதுகலை படித்துள்ள இவர் ஒரு சர்வதேச நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த வருடம் இவர் தன்னுடைய வேலையை ராஜினாமா செய்து பூஜைகளில் ஈடுபடத் தொடங்கினார்.

The post சபரிமலைக்கு புதிய தந்திரி appeared first on Dinakaran.

Related Stories: