காரியாபட்டி அருகே மணல் திருடியவர் கைது

 

காரியாபட்டி: காரியாபட்டி அருகே மணல் திருடிய முதியவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். காரியாபட்டி தாலுகா, சூரனூர் கிராம நிர்வாக அதிகாரி தனசேகர் (52) இவரும் கிராம உதவியாளர் பாண்டியும் மணல் திருட்டு சம்பந்தமாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கே.நெடுங்குளம் கண்மாய் மறுகால் ஓடை பகுதியில் சிவலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த செல்லமணி (46)என்பவர் மாட்டு வண்டியில் எந்தவித அனுமதியுமின்றி திருட்டுத்தனமாக மணல் அள்ளிக்கொண்டிருப்பதை பார்த்த கிராம நிர்வாக அதிகாரி தனசேகர் மாட்டு வண்டியை பறிமுதல் செய்தும், மணல் திருட்டில் ஈடுபட்ட செல்லமணியையும் அ.முக்குளம் போலீசில் ஒப்படைத்தார். கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் அ.முக்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து மணல் திருட்டில் ஈடுபட்ட செல்லமணியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

The post காரியாபட்டி அருகே மணல் திருடியவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: