காஞ்சிபுரம் மாவட்டத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணி தீவிரம்

 

ஸ்ரீபெரும்புதூர்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. வடக்கிழக்கு பருவமழைக்காலம் தொடங்கி உள்ளதால், டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதனை தடுக்கும் விதமாக காஞ்சிபுரம் மாவட்ட சுகாதார துறை சார்பில், வட்டார மருத்துவ அலுவலர் பிரேம் குமார் தலைமையில், வட்டார மேற்பார்வையாளர் குமார் மேற்பார்வையில், சுகாதார ஆய்வாளர்கள் தரணிதரன், சத்யா, நேதாஜி, பிரபாகரன், ஹேமசந்திரன் பாலசுந்தரம் ஆகியோர் கொண்ட குழுவினர் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் தண்டலம், போந்தூர், பண்ருட்டி மற்றும் ஸ்ரீபொரும்புதூர் பேரூராட்சி பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மேற்கண்ட கிராமங்களில் வீடுகள் மற்றும் கடைகளில் டெங்கு கொசுக்கள் உற்பத்திக்கு காரணமான உபயோகமற்ற டயர்களை வாகனங்களில் ஏற்றி அப்புறப்படுத்தினர். மேலும், மழைநீர் தேங்காமல் பார்த்திக்கொள்ள வேண்டும் எனவும், மழைக்காலத்தில் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும் என்றும் வீதி வீதியாக சென்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

The post காஞ்சிபுரம் மாவட்டத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணி தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: