களர்பதி அரசு பள்ளியில் ஆண்டு விழா

போச்சம்பள்ளி: மத்தூர் அருகே களர்பதி அரசு பள்ளியில் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. மத்தூர் ஒன்றியம், களர்பதி அரசு உயர் நிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பிடிஏ தலைவர் மூர்த்தி தலைமை தாங்கினார். ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயந்தி புகழேந்தி, மகேஸ்வரி சீனிவாசன், தமிழ்செல்வி, கவுன்சிலர் மகேஸ்வரி, கோவிந்தராஜ் சுதா மாது, கணேசன் அண்ணாமலை முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் நெப்போலியன் வரவேற்றார், சேர்மன் விஜயலட்சுமி பெருமாள், தி.மு.க. ஒன்றிய செயலாளர் குண.வசந்தரசு, தலைமை செயற்குழ உறுப்பினர் செந்தில், வெங்கடாசலம், உதயகுமார், பூபதி, ஆகியோர் பேசினர். விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மாணவர்களின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

The post களர்பதி அரசு பள்ளியில் ஆண்டு விழா appeared first on Dinakaran.

Related Stories: