கல்லணையில் புதிய ஆட்சியர் திடீர் ஆய்வு

திருக்காட்டுப்பள்ளி, மே 27: தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் தஞ்சை மாவட்ட புதிய ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள தீபக் ஜேக்கப் திடீர் ஆய்வு மேற்கொண்டார். நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர்கள் கல்லணை நீர் குறித்து ஆட்சியரிடம் விளக்கம் அளித்தனர். ஆய்வில் ஆட்சியர் கல்லணை காவிரி ஆற்றில் கரிகால் சோழன் காலம் தொடங்கி இதுவரையில் நடைபெற்றுள்ள பணிகள், எவ்வாறு தண்ணீர் சேமிக்கப்பட்டு பாசனத்திற்காக பிரித்து வழங்கப்படுகிறது. தற்போது நடந்து வரும் பணிகளின் விவரம் என அனைத்தையும் கேட்டு அறிந்துகொண்டார். பின்னர் நேரடியாக பணிகள் நடக்கும் இடத்தையும் பார்வையிட்டார்.

ஆய்வின் போது, நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர்கள் இளங்கோ (காவிரி), மதன சுதாகர் (வெண்ணாறு), பவளக்கண்ணன் (கல்லணை கால்வாய்), உதவி செயற்பொறியாளர்கள் சிவக்குமார் (காவிரி), மலர்விழி (வெண்ணாறு). சீனிவாசன் (கல்லணை கால்வாய்), உதவி பொறியாளர்கள் திருமாறன், செந்தில்குமார், சேந்தன், பூதலூர் வட்டாட்சியர் பெர்சியா, ஒன்றிய குழு தலைவர் கல்லணை செல்லக்கண்ணு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பொற்செல்வி, ராஜா, ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜெகதீசன், வடிவழகன் உடன் இருந்தனர். பின்னர் கோவிலடி வாய்க்கால் தூர்வாரும் பணி, பூண்டி காவிரியில் தடுப்பணை பணி, வெண்ணாற்றில் தூர் வாரும் பணி, ஆனந்த காவிரி வாய்க்கால் தூர்வாரும் பணி, பிள்ளை வாய்க்கால் கிளை வாய்க்கால் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டார்.

The post கல்லணையில் புதிய ஆட்சியர் திடீர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: