கர்நாடகாவில் 18 அரசு அதிகாரிகளுக்கு சொந்தமான 75 இடங்களில் லஞ்ச ஒழிப்பு ரெய்டு: பல கோடி மதிப்பு ஆபரணங்கள், கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்

பெங்களூரு: கர்நாடகாவில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த 18 அரசு அதிகாரிகளின் 75 இடங்களில் ஊழல் தடுப்புப்படை போலீசார் நேற்று காலை அதிரடி சோதனை நடத்தி கோடிக்கணக்கில் பணத்தை பறிமுதல் செய்தனர். கர்நாடக மாநிலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக மாநில ஊழல் தடுப்புப்படை (ஏசிபி) போலீசாருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து நேற்று அதிகாலை பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் உள்ள 18 அரசு அதிகாரிகளுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள், தொழிற்சாலைகள், கல்வி குழுமங்கள் உள்பட 75 இடங்களில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கோடிக்கணக்கில் ரொக்கப்பணம் கிலோ கணக்கில் தங்கம் வெள்ளி நகைகள் பல நூறு கோடி மதிப்பில் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்தனர்.ஊழல் தடுப்புப்படை ேபாலீசார் மேற்கொண்ட சோதனையில் போக்குவரத்து, பெங்களூரு வளர்ச்சி குழு, வனம், நீர்ப்பாசனம், பொதுப்பணி, சமூக நலம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகள் வீட்டில் இந்த சோதனை நடைபெற்றது. பெங்களூரு, தென்கனரா, ரெய்ச்சூர், மைசூரு, தாவணகெரே, ராம்நகரம், விஜயபுரா, கதக் உள்ளிட்ட பல மாவட்டங்களில் சோதனை நடைபெற்றது. ஊழல் தடுப்புப்படை போலீசார் 300 பேர் மற்றும் போலீஸ்துறை அதிகாரிகள் 100 பேர் இந்த சோதனையில் ஈடுபட்டனர். ஒரே சமயத்தில் 18 அரசு உயர் அதிகாரிகள் வீட்டில் நடத்தப்பட்ட இந்த சோதனை கர்நாடக அரசு அதிகாரிகள் மத்தியில் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஊழல் தடுப்புப்படை ேபாலீசார் நடத்திய சோதனையின்போது, சாக்கு மூட்டைகள், பக்கெட், பாத்ரூம், பழைய ஆடைகள் சேமித்து வைத்துள்ள கூடைகள் ஆகியவற்றில் மறைத்து வைத்திருந்த கோடிக்கணக்கான மதிப்புள்ள தங்க, வைர, வெள்ளி ஆபரணங்கள், கோடிக்கணக்கில் கட்டு கட்டாக மறைத்து வைத்திருந்த ரொக்க பணம், பல ேகாடி மதிப்பிலான வீடு, பங்களாக்கள், விவசாய நிலம், வீட்டுமனைகள், காலி நிலம் ஆவணங்கள். வங்கிகளில் டெபாசிட் செய்துள்ள பணத்திற்கான கணக்கு புத்தகம், பினாமி பெயரில் வாங்கி குவித்துள்ள சொத்துகளுக்கான ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர்.குப்பையில் கோடிகள்: மாநில ஊழல் தடுப்புப்படை ேபாலீசார் நடத்திய சோதனையில் அரசு அதிகாரிகள் வீடுகளில் சோதனை செய்து வரும் நிலையில் ரெய்ச்சூர் மாவட்டத்தில் நகராட்சி இணை பொறியாளர் வீட்டின் பின்புறம் குப்பை கொட்டி வைத்திருந்த இடத்தில் மறைத்து வைத்திருந்த கட்டுக்கட்டாக பணம் நகை மற்றும் தங்க கட்டிகள் கைப்பற்றப்பட்டது. …

The post கர்நாடகாவில் 18 அரசு அதிகாரிகளுக்கு சொந்தமான 75 இடங்களில் லஞ்ச ஒழிப்பு ரெய்டு: பல கோடி மதிப்பு ஆபரணங்கள், கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: