கன்னட நடிகர் சேத்தன் குமார் கைது

பெங்களூரு: கர்நாடகா உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ண தீட்சித் குறித்து கன்னட நடிகர் சேத்தன் குமார் என்பவர் கடந்த 14ம் தேதி சர்ச்சைக்குரிய வகையில் டிவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டார். இதையடுத்து பெங்களூரு காவல்துறையினர் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து சேத்தன் குமாரின் மனைவி மேகா வெளியிட்ட பேஸ்புக் பதிவில், தன் கணவரை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து பெங்களூரு போலீஸ் கமிஷனர் கமல் பந்த் கூறுகையில், ‘ஹிஜாப் விவகாரம் தொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தற்போதைய நீதிபதிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சேத்தன் குமார் கருத்து தெரிவித்திருந்தார். இதனால் பதற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது’ என்றார்….

The post கன்னட நடிகர் சேத்தன் குமார் கைது appeared first on Dinakaran.

Related Stories: