கடற்கரை கோயில் வளாகத்தில் சுற்றி திரிந்து சுற்றுலா பயணிகளை முட்டும் மாடுகள்

* பயணிகள் அவதி * கண்டு கொள்ளாத தொல்லியல் துறைமாமல்லபுரம்:  கடற்கரை கோயில் வளாகத்தில் சுற்றித் திரியும் மாடுகள் சுற்றுலா பயணிகளை முட்டுவதால் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இது குறித்து தொல்லியல் துறை நடவடிக்கை எடுக்காமல் கண்டும் காணாமல் இருந்து வருகிறது.மாமல்லபுரம் உலக புகழ் வாய்ந்த சுற்றுலா தலமாகவும், கோயில் நகரமாகவும் திகழ்ந்து வருகிறது. இங்குள்ள புராதன சின்னங்களை யுனேஸ்கோ நிறுவனம் அங்கிகரித்துள்ளது. இங்குள்ள, புராதன சின்னங்களை சுற்றி பார்ப்பதற்காக உள்நாடு மற்றும் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அப்படி, வருபவர்கள் புராதன சின்னங்களை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில், கடற்கரை கோயில் வளாகத்தில் சுற்றி திரியும் மாடுகள் இங்கு வரும் சுற்றுலா பயணிகளை துரத்தி, துரத்தி முட்டுகிறது. இதனால், சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், ஒரு சில சுற்றுலா பயணிகள் மாட்டிற்கு பயந்து கடற்கரை கோயிலை கண்டு ரசிக்க முடியாமல் வீடு திரும்பி செல்கின்றனர். இது சம்பந்தமாக, சுற்றுலா பயணிகள் பலமுறை தொல்லியல் துறையிடம் புகார் தெரிவித்தும், மாடுகளை அப்புறபடுத்த இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை கண்டுகளிக்க உள்நாடு மட்டுமின்றி, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் ஏராளமானோர் வருகை தருகின்றனர். அப்படி, வருபவர்கள் புராதன சின்னங்களை சுற்றிப்பார்த்து புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். கடற்கரை, கோயிலுக்கு வரும் பயணிகளை அங்குள்ள மாடுகள் துரத்தி, துரத்தி முட்டுவதால் பயந்து அங்கும், இங்கும் ஓடுகின்றனர். இதனால், பயணிகள் ஒரு சிலர் கடற்கரை கோயிலை கண்டு ரசிக்க முடியாமல் வீடு திரும்புகின்றனர். எனவே, தொல்லியல் துறை நிர்வாகம் உடனடியாக தலையிட்டு கடற்கரை கோயில் வளாகத்தில் சுற்றித்திரியும் மாடுகளை அப்புறபடுத்தி, சுற்றுலா பயணிகள் சிரமமின்றி புராதன சின்னங்களை கண்டு ரசிக்க வழிவகை செய்ய வேண்டும்’ என்றார்….

The post கடற்கரை கோயில் வளாகத்தில் சுற்றி திரிந்து சுற்றுலா பயணிகளை முட்டும் மாடுகள் appeared first on Dinakaran.

Related Stories: