ஓய்வுபெற்ற அரசு அதிகாரி வீட்டில் 10 பவுன் நகை, வெள்ளி, பணம் திருட்டு மேலும் 2 அதிகாரி வீடுகளில் திருட்டு முயற்சி

விழுப்புரம், செப். 26: விழுப்புரம் சாலாமேடு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி(80).ஓய்வு பெற்ற நில அலவை துறை இதிகாரி தனது மனைவி கஸ்தூரியுடன் வசித்து வருகிறார். இதனிடையே கிருஷ்ணசாமிக்கு இறுதய அறுவை சிகிச்சைக்காக கடந்த 4ம்தேதி சென்னையில் உள்ள தனது மகன் வீட்டிற்கு சென்றிருந்தாராம். அதிலிருந்து வீடு பூட்டியே கிடந்துள்ளது. இதனிடையே நேற்று காலை பக்கத்துவீட்டை சேர்ந்தவர்கள் பார்த்தபோது கிருஷ்ணசாமி வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து அவருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் தாலுகா காவல்நிலையத்திற்கு புகார் அளிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 10 பவுன் நகை, 200 கிராம் வெள்ளி, ரூ.25,000 ரொக்கபணம் திருடு போயிருந்தது தெரியவந்தது. தொடர்ந்து கைரேகை நிபுணர்கள், தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. திருடுபோன நகை, வெள்ளியின் மதிப்பு ரூ.3.50 லட்சம் ஆகும். கிருஷ்ணசாமி வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றிருப்பதை நோட்டமிட்டு இந்த கொள்ளை சம்பவம் நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. இதனிடையே அதே பகுதியில் வசிக்கும் ஓய்வுபெற்ற நீதிமன்ற ஊழியர் சிவராமகிருஷ்ணன், ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை அதிகாரி பாலகுமரன் வீடுகளிலும் மர்மநபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பூட்டை உடைக்க முடியாததால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து தாலுகா காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஓய்வுபெற்ற அரசு அதிகாரி வீட்டில் 10 பவுன் நகை, வெள்ளி, பணம் திருட்டு மேலும் 2 அதிகாரி வீடுகளில் திருட்டு முயற்சி appeared first on Dinakaran.

Related Stories: