ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணிபுரிய வாய்ப்பு

 

திருச்சி, ஜூன் 28: ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணிபுரிய திருச்சி மாவட்டத்தைச் சார்ந்த பெண் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று திருச்சி மாவட்ட கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, திருச்சி மாவட்டத்தில் மாவட்ட சமூகநல அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் தனியார் மற்றும் பொது இடங்களில், குடும்பத்தில், சமுதாயத்தில், பணிபுரியும் இடங்களில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் வகையில் திருச்சி ஒருங்கிணைந்த சேவை மையம் செயல்பட்டு வருகிறது.

அம்மையத்தில் சுழற்சி முறையில் பணிபுரிய பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் திருச்சி மாவட்டத்தைச் சாா்ந்த பெண் விண்ணப்பதார்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பதவியின் பெயர்: வழக்கு பணியாளா், பணியிட எண்ணிக்கை -1, ஒப்பந்த ஓய்வூதியம்- ரூ. 18,000, கல்வித்தகுதி- சமூகபணி ஆலோசனை இளநிலை பட்டம், எம்.எஸ்.சி சைக்காலஜி, எம்.எஸ்.சி சமூகபணி, மேலும் விண்ணப்பங்கள் ஜூன் 30ம் தேதி மாலை 5 மணிக்குள் நோிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ மாவட்ட சமூகநல அலுவலா், மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், 0431-2413796 திருச்சி. என்ற முகவாியில் அனுப்பலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

The post ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணிபுரிய வாய்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: