ஒன்றிய அரசு அறிவிப்பு: ராஜபாதை இனி ‘கடமை பாதை’

புதுடெல்லி: டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகை முதல் நேதாஜி சிலை வரையிலான ராஜபாதை, ‘கர்த்தவ்யா பாதை’ (கடமை பாதை) என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. டெல்லியின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக ராஜபாதை விளங்குகிறது. இந்த பாதை ஜனாதிபதி மாளிகை முதல் நேதாஜி சிலை வரை அமைந்துள்ளது. சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ் புதிய நாடாளுமன்ற கட்டிடம், ஒன்றிய அரசு செயலகம், பிரதமர், துணை ஜனாதிபதி உள்ளிட்டோருக்கான குடியிருப்புகள் ஆகியவற்றை உள்ளடக்கியது. சென்ட்ரல் விஸ்டா திட்டத்தில் கட்டப்பட்ட புதிய வளாகத்தை பிரதமர் மோடி நாளை மறுநாள் திறந்து வைக்க உள்ளார். இந்நிலையில் ராஜபாதையின் பெயர் மாற்றம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, ராஜபாதையின் பெயர் கடமை பாதை (கர்த்தவ்யா பாத்) என மாற்றப்படுவதாக ஒன்றிய அரசு நேற்று அறிவித்தது. குடியரசு தினத்தின் போது, ராஜபாதையில் தான் முப்படைகளின் அணிவகுப்பு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது….

The post ஒன்றிய அரசு அறிவிப்பு: ராஜபாதை இனி ‘கடமை பாதை’ appeared first on Dinakaran.

Related Stories: