உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குற்ற வழக்கு நிலுவையில் இல்லை என்ற சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டுமா?: மாநில தேர்தல் ஆணையருக்கு அதிமுக மனு

சென்னை: சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள மாநில தேர்தல் ஆணையரிடம் நேற்று அதிமுக சட்ட ஆலோசனை குழு சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில் கூறி இருப்பதாவது: மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் புதிதாக கணக்கு தொடங்கி, அந்த கணக்கில் இருந்து தேர்தல் செலவுகளை மேற்கொள்ள வேண்டும் என்ற நடைமுறை இருக்கிறது. அதேபோல நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் தனித்தனியாக அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளில் இருந்து கணக்கு தொடங்கப்பட வேண்டுமா?போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களின் மீது குற்ற வழக்குகள் எதுவும் நிலுவையில் இல்லை என்ற தடையில்லா சான்றிதழை, குறிப்பிட்ட காவல் நிலையங்களில் இருந்து பெற்று வேட்புமனுவுடன் இணைக்க வேண்டுமா, சொத்து விவரங்களுக்காக ஆவணங்களை வேட்புமனுவுடன் இணைக்க வேண்டுமா என்பதை உடனடியாக அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும், தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கும் தமிழ்நாடு மாநில தலைமை தேர்தல் ஆணையம் ஒரு சுற்றறிக்கையை அனுப்ப வேண்டும். வேட்புமனு தாக்கலை, சுமுகமான சூழ்நிலையை உருவாக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை என கூறப்பட்டுள்ளது….

The post உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குற்ற வழக்கு நிலுவையில் இல்லை என்ற சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டுமா?: மாநில தேர்தல் ஆணையருக்கு அதிமுக மனு appeared first on Dinakaran.

Related Stories: