உத்தமபாளையத்தில் சமூக நல்லிணக்க பெருநாள் சந்திப்பு

 

உத்தமபாளையம்: உத்தமபாளையம் ஸ்டார் கமியூனிட்டி ஹாலில் நன்செய் தன்னார்வ அமைப்பு மற்றும் தேனி ரூரல் அப்ளிப்ட்மென்ட் சோசியல் டிரஸ்ட் இணைந்து நடத்திய சமூக நல்லிணக்க ஈகை பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்விற்கு, உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரி தாளாளர் தர்வேஷ் முஹையிதின் தலைமை தாங்கினார். கம்பம் அல் அஜ்ஹர் பள்ளி தாளாளர நைனார் முஹம்மது முன்னிலை வகித்தார். நன் செய் அமைப்பு பசுமை செந்தில் வரவேற்றார். நிகழ்ச்சியை கவுன்சிலர் சேக் கமர்தீன் தொகுத்து வழங்கினார்.

இஸ்லாமிய தகவல் மற்றும் வழிகாட்டுதல் மையம் சார்பில் இமாம் அப்துல் கரீம், தேனி மற்றும் கோவை கெளமாரியம்மன் உணவு குழுமம் நிர்வாக இயக்குநர் சுதாகர், தேனி நாடார் உறவின் முறை கல்வி நிறுவனங்களின் தலைவர் ராஜ்மோகன், பேரூராட்சி தலைவர் முகமது அப்துல் காசிம். வக்கீல் சத்யமூர்த்தி, டாகுமெண்ட் முருகேசன், பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் செயலாளர் பொன் காட்சி கண்ணன், உத்தமபாளையம் ஆர்.சி சர்ச் பங்கு தந்தை ஜோசப் அந்தோணி ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கும்பளேணம் திருவடிக்குடிள் சுவாமிகள் பேசினார். நிகழ்ச்சியில் அனைத்து சமுதாய அமைப்புகள், சர்வ கட்சிகளின் நிர்வாகிகள், தன்னார்வ அமைப்புகள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.

The post உத்தமபாளையத்தில் சமூக நல்லிணக்க பெருநாள் சந்திப்பு appeared first on Dinakaran.

Related Stories: