இந்தியாவில் டி.20 உலக கோப்பை: ஜூன் 28ம் தேதி வரை ஐசிசி அவகாசம்

துபாய்: 16 அணிகள் பங்கேற்கும் 7வது டி.20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை, லக்னோ, மும்பை  உள்பட 9 இடங்களில் போட்டிகளை நடத்த தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை பரவல் காரணமாக போட்டி தொடரை திட்டமிட்டபடி இந்தியாவில் நடத்தலாமா அல்லது ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றலாமா என்பதை முடிவு செய்ய சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டம் காணொலி  வாயிலாக நேற்று நடந்தது. இதில்பிசிசிஐ சார்பில் சவுரவ் கங்குலி  பங்கேற்று , டி.20 உலக கோப்பை தொடரை இந்தியாவில் நடத்துவது குறித்து முடிவு எடுக்க ஒருமாத காலம் அவகாசம் கோரினார். இதனை ஐசிசி ஏற்றுக்கொண்டு இந்த மாதம் 28ம்தேதி வரை அவகாசம் வழங்கியது. ஒருவேளை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு போட்டி தொடர் மாற்றப்பட்டாலும் இந்தியாவே தொடரை நடத்தும் உரிமையை தக்க வைக்கும் என முடிவு செ்யயப்பட்டது. ஒருவேளை இந்தியாவில் நடத்தாமுடியாவிட்டால் ஐக்கிய அரபு அமீரகத்தை தவிர ஓமன் நாட்டிலும் போட்டி தொடரை நடத்துவது குறித்த சாத்தியகூறுகளை ஆராய ஐசிசி முடிவு செய்துள்ளது. …

The post இந்தியாவில் டி.20 உலக கோப்பை: ஜூன் 28ம் தேதி வரை ஐசிசி அவகாசம் appeared first on Dinakaran.

Related Stories: