சேலம் மக்களுக்கு அனைத்து கட்சிகளும் துணை நிற்க வேண்டும்: வழக்கறிஞர் வாஞ்சிநாதன் பேட்டி

பாளையங்கோட்டை : தூத்துக்குடி போராட்டக்கார்களுக்கு சட்ட உதவி செய்ததாக கடந்த 20ம் தேதி கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் வாஞ்சிநாதன் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை மத்திய சிறையில்  இருந்து வாஞ்சிநாதன் விடுதலை செய்யப்பட்டார். மேலும் ஸ்டெர்லைட் போராட்டத்தை தூண்டியது உள்பட 9 வழக்குகளில் வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு நேற்று சென்னை உயர்நீதிமன்ற கிளை ஜாமீன் வழங்கியது  குறிப்பிடத்தக்கது.

பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்து விடுதலையான பின் பேட்டியளித்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன், என் மீது 32 வழக்குகளில் காவல்துறை கைது செய்ய முயற்சி செய்தது. அதில் 9 வழக்குகளில் என்னை கைது  செய்தது. மீதமுள்ள 23 வழக்குகளில் வாரண்ட வாங்குவதற்கு காவல்துறை ஈடுபட்டது என்றும் தம்மை மீண்டும் சிறையில் அடைக்க காவல்துறை முயற்சி செய்யவதாகவும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை பற்றி பேச  தடைவிதித்ததால் அதைப் பற்றி பேசவில்லை என்று தெரிவித்தார். மேலும் சேலம் மக்களுக்கு அனைத்து கட்சிகளும் துணை நிற்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: