இணையத்தில் எப்.ஐ.ஆர் பதிவேற்றப்படுகிறதா? அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

சென்னை: சென்னையைச் சேர்ந்த பாலாஜி என்பவர் தாக்கல் செய்த மனுவில், சென்னை பெருநகர காவல் துறையில் சிபிசிஐடி மற்றும் சைபர் குற்றப் பிரிவில் பதிவு செய்யப்படும் வழக்குகளின் முதல் தகவல் அறிக்கைகள் இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்படுவதில்லை என்பதால், அவற்றை பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதைக்கேட்ட நீதிபதிகள், முதல் தகவல் அறிக்கைகளை இணைய தளங்களில் வெளியிட வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த எடுத்த நடவடிக்கைகள் குறித்து விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். இதுவரை உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தி இருக்காவிட்டால், உடனடியாக அதை அமல்படுத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்….

The post இணையத்தில் எப்.ஐ.ஆர் பதிவேற்றப்படுகிறதா? அரசுக்கு ஐகோர்ட் கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: