மும்பை: இந்தி இளம் நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தை தொடர்ந்து இந்தி திரையுலகில் போதைப்பொருள் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இதையடுத்து நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் வழக்கில் மும்பை மண்டல போதைப்பொருள் தடுப்பு பிரிவு இயக்குனர் சமீர் வான்கடேவால் கைது செய்யப்பட்டார்.இந்நிலையில் ஆர்யன் கான் குற்றமற்றவர் என நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விசாரணையில் நடந்த தவறுகளை போதைப்பொருள் தடுப்பு பிரிவு தலைவர் எஸ்.என்.பிரதான் ஒப்புக்கொண்டுள்ள நிலையில் சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.ஆர்யன் கான் கைது செய்யப்பட்டதும் அவரை விடுவிக்க சமீர் வான்கடே ரூ.24 கோடி பேரம் பேசியதாக குற்றசாட்டு எழுந்தது. எனவே தரக்குறைவான விசாரணைக்காக சமீர் வான்கடே மீது நடவடிக்கை எடுக்குமாறு நிதியமைச்சகத்துக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. சமீர் வான்கடே ஐ.ஆர்.எஸ். அதிகாரி என்பதால் நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் நிதியமைச்சகத்துக்கு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. …
The post ஆர்யன் கானை போதைப்பொருள் வழக்கில் சிக்கவைத்த போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடே மீது நடவடிக்கை appeared first on Dinakaran.