அர்த்தநாரீஸ்வரர் குளம் சீரமைப்பு: தா.மோ.அன்பரசன் பெருமிதம்

ஆலந்தூர்: ஆலந்தூர் தொகுதி திமுக வேட்பாளர் தா.மோ.அன்பரசன் நேற்று பழவந்தாங்கல், பிவி.நகர், நேரு காலனி, நியூ காலனி ஆகிய பகுதியில் வாக்கு சேகரித்தார். அப்போது அவருடன் ஆலந்தூர் தெற்குப்பகுதி திமுக செயலாளர் என்.சந்திரன் மாவட்ட பொருளாளர் இப்ராஹிம் ஆகியோர் உடன் சென்றனர். பின்னர் வேட்பாளர் தா.மோ.அன்பரசன் பேசுகையில் ‘‘ஆதம்பாக்கம் நிலமங்கை நகரில் ₹24 கோடியே 52 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கழிவுநீர் உந்து நிலையம் பணி நடந்து வருகிறது. ஆதம்பாக்கம் ஏரியில் ஒரு கோடியே ₹52 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர், நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் குளம் ₹3 கோடி செலவில் நவீனமுறையில் படித்துறை காரிய மண்டபம் கட்டித்தந்துள்ளேன். ஆதம்பாக்கத்தில் விடுபட்ட 81 தெருக்களில் ₹11 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ குடிநீர் கொண்டு வந்தேன்,” இவ்வாறு அவர் பேசினார். இந்த வாக்கு சேகரிப்பில் திமுக பொதுக்குழு உறுப்பினர் பூபாலன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ஜெயராம் மார்த்தாண்டன், வட்டப் பகுதி துணை செயலாளர்கள் சத்யா, முத்து, செயலாளர்கள் நடராஜ், ஏசுதாஸ் ஜெகதீஸ்வரன், நாகராஜசோழன், வெள்ளைச்சாமி. ராமண்ணா, கேபிள் ராஜா சார்பாக ஆலந்தூர் மண்டல பொறுப்பாளர்கள் ஆதம் ரமேஷ், ஜோதி, முன்னாள் மண்டல தலைவர் சிக்கந்தர், ஆதம்பிரகாஷ், மதிமுக பகுதி செயலாளர் உட்பட பலர் கலந்துகொண்டனர்….

The post அர்த்தநாரீஸ்வரர் குளம் சீரமைப்பு: தா.மோ.அன்பரசன் பெருமிதம் appeared first on Dinakaran.

Related Stories: