வெளிநடப்பு விவகாரத்தில் இந்தியா கூட்டணிக்கு பிஜூ ஜனதா தளம் ஆதரவு: பாஜ பக்கம் சாய்ந்தது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்

புதுடெல்லி: மாநில கட்சிகளில் ஒடிசாவின் பிஜூ ஜனதா தளம் மற்றும் ஆந்திராவின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் இரண்டுமே எந்த கூட்டணியிலும் சேராமல் இருக்கின்றன. ஆனாலும், கடந்த முறை இவ்விரு கட்சிகளும் நாடாளுமன்றத்தில் பாஜ அரசுக்கு ஆதரவாக செயல்பட்டன. அரசு கொண்டு வரும் அனைத்து மசோதாக்களையும் ஏற்றுக் கொண்டன. இந்த நிலையில், சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் இரு கட்சிகளும் தோல்வி அடைந்தன. ஒடிசாவில் பிஜூ ஜனதா தளத்திடம் இருந்து பாஜ ஆட்சியை கைப்பற்றி உள்ளது. இதனால் இனி நாடாளுமன்றத்தில் பாஜவுக்கு ஆதரவில்லை என பிஜூ ஜனதா தள தலைவர் நவீன் பட்நாயக் ஏற்கனவே கூறியிருந்தார்.

இந்நிலையில் நேற்று மாநிலங்களவையில் இந்தியா கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு செய்த போது பிஜூ ஜனதா தள எம்பிக்களும் ஆதரவாக வெளிநடப்பு செய்தனர். இது குறித்து அக்கட்சி மூத்த எம்பி சம்பித் பத்ரா கூறுகையில், ‘‘ஜனாதிபதி உரையிலும், பிரதமர் மோடியின் பதிலிலும் ஒடிசா மாநில மக்களின் கோரிக்கைகள் விருப்பங்கள் எதுவும் இடம்பெறவில்லை’’ என்றார். அதே சமயம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்பி விஜயசாய் ரெட்டி, எதிர்க்கட்சிகளின் வெளிநடப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் பிஜூ ஜனதா தளத்திற்கு 9 எம்பிக்களும், ஒய்எஸ்ஆர் காங்கிரசுக்கு 11 எம்பிக்களும் உள்ளனர். மக்களவையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 4 எம்பிக்களை வைத்துள்ளது.

The post வெளிநடப்பு விவகாரத்தில் இந்தியா கூட்டணிக்கு பிஜூ ஜனதா தளம் ஆதரவு: பாஜ பக்கம் சாய்ந்தது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் appeared first on Dinakaran.

Related Stories: