அடிப்படை வசதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்: மயிலை த.வேலு வாக்குறுதி

சென்னை: மயிலாப்பூர் தொகுதி திமுக வேட்பாளர் மயிலை.த.வேலு வீடு, வீடாக சென்று மக்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குசேகரித்து வருகிறார். அப்போது திமுக வேட்பாளர் மயிலை த.வேலு இந்த தொகுதியை பற்றி நன்கு அறிந்தவன். இந்த தொகுதிக்கும், மக்களுக்கும் என்ன தேவை என்பதையும் அறிந்தவன். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நிச்சயமாக அடிப்படை வசதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். மேலும் மயிலாப்பூர் தொகுதியில் சிறப்பு மிகுந்த கோயில்கள் அமைந்த பகுதியாகும், எனவே மயிலாப்பூர் பகுதியை சிறந்த ஆன்மிக சுற்றுலாத் தலமாக மாற்றுவேன். சிறந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும். இப்பகுதியில் உள்ள இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஆண்டு தோறும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும். சட்டமன்ற வேட்பாளரின் பணியை சிறப்பாக செய்து மக்களிடம் நன்மதிப்பை பெறுவேன் என வாக்குறுதி அளித்தார்….

The post அடிப்படை வசதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்: மயிலை த.வேலு வாக்குறுதி appeared first on Dinakaran.

Related Stories: