அஞ்சலக ஊழியர்கள் வேலை நிறுத்தம் தபால் பட்டுவாடா பாதிப்பு

 

மதுரை, டிச.13: கிராமிய தபால் ஊழியர்களுக்கு 8 மணி நேரம் வேலை வழங்கி, பென்சன் உட்பட இலாகா ஊழியர் அந்தஸ்து வழங்க வேண்டும். 2018ம் ஆண்டில் கமலேஷ்சந்திரா கமிட்டியின் பரிந்துரைப்படி பணபலத்துடன் கூடிய மூன்று கட்ட பதவி உயர்வு, 180 நாட்கள் சேமிப்பு விடுப்பு வழங்க வேண்டும் என்பன உட்பட 10 அம்ச கோரிக்கைகளை ஒன்றிய அரசு உடனே நிறைவேற்றித் தரவேண்டும் என்று வலியுறுத்தியும், தொடர்ந்து ஊழியர்களை ஏமாற்றி வரும் ஒன்றிய அரசை கண்டித்தும் அகில இந்திய கிராமிய தபால் ஊழியர்கள் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.

மதுரை தல்லாகுளம் தலைமை அஞ்சலகம், கலெக்டர் அலுவலகம் மற்றும் சேதுபதி பள்ளி அருகேயுள்ள தலைமை அஞ்சலகம் ஆகிய அஞ்சலகங்கள் முன்பு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை கோட்டத்திற்குட்பட்ட 245 கிளை அஞ்சலங்களில் பணிபுரியம் 450க்கும் மேற்பட்ட ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும். இந்த போராட்டத்தில் நூறு சதவீத ஊழியர்கள் நாளை (இன்று) பங்கேற்கின்றனர். இதனால் போராட்டம் மேலும் தீவிரமடையும் என்று ஊழியர்கள் தெரிவித்தனர். ஊழியர்களின் போராட்டம் காரணமாக 90 சதவீத தபால் பட்டுவாடா பணிகள் பாதிக்கப்பட்டன.

 

The post அஞ்சலக ஊழியர்கள் வேலை நிறுத்தம் தபால் பட்டுவாடா பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: