புதுடெல்லி: இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக பாஜக முன்னாள் எம்.பி பிரிஜ்பூஷன் சரண் சிங் பதவி வகித்த போது, தங்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறி முன்னணி மல்யுத்த வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் தீவிர போராட்டங்களை நடத்தினர். இதையடுத்து அந்த போராட்டத்தின் விளைவாக, டெல்லி போலீசார் பிரிக்பூஷன் சரண் சிங் மற்றும் அமைப்பின் முன்னாள் உதவி செயலாளர் வினோத் தோமர் ஆகியோர் மீது 2023ம் ஆண்டு ஜூன் 15ம் தேதி வழக்குப்பதிவு செய்தனர்.
மேற்கண்ட வழக்கில் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தின் கூடுதல் தலைமை மேஜிஸ்திரேட் அஸ்வனி பன்வார் நேற்று தீர்ப்பளித்தார். அதில்,‘‘இந்த வழக்கில் பிரிக்பூஷன் சரண் சிங் மற்றும் வினோத் தோமர் ஆகிய இருவரையும் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் நீதிமன்றம் விடுவிக்கிறது. குறிப்பாக இந்த விவகாரத்தில் வீராங்கனைகள் தரப்பில் கூறப்பட்ட புகார்களில் போதுமான ஆதாரங்கள் இல்லை. மேலும் சாட்சியங்களில் முரண்பாடுகள் இருக்கிறது என்று கருத்து தெரிவித்து உத்தரவிட்ட நீதிபதி, இதுதொடர்பான வழக்கை முடித்து வைத்தார்.
