புதுடெல்லி: காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தன் எக்ஸ் பதிவில், “உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி காவல் துறை மற்றும் மத்திய ஆயுதமேந்திய துணை ராணுவ படைகளால் இந்தியாவின் இளைஞர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை நடந்து 14 நாள்களாகி விட்டன. ஆனால், ஜூலை 20 முதல் உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரண்டிலிருந்தும் வேண்டுமென்றே விலகி இருக்கிறார். தனது அமைச்சகத்தின் நடவடிக்கைகளுக்கு பொறுப்பேற்க அவர் மறுத்து வருகிறார். நாடாளுமன்றத்தை அரசாங்கம் இவ்வளவு அவமதிக்கிறது” என குற்றம் சாட்டினார்.
